;
Athirady Tamil News

“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு!! (படங்கள்)

0

“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு

“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் கல்முனை பிராந்திய தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (18) சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நாட்டில் தலைதூக்கும் போதைப்பொருள் கட்டுப்பாடு, நாட்டில் இப்போதைய நிலையில் உள்ள மருந்து தட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடியில் சுகாதார சேவைகளை கையாளுவது தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்ட இந்த செயலமர்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்தியின் பொருட்டு கல்முனை பிராந்திய தனியார் பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையிலான பணிமனை உத்தியோகத்தர்களிடம் நன்கொடையாக ஒருதொகை பணத்திற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டதுடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் ஆகியோரின் சேவையை பாராட்டி கல்முனை பிராந்திய தனியார் பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் “2015ஆம் ஆண்டின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சட்டமும், ஒழுங்கு விதிகளும்” தொடர்பில் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் டீ. வரதராஜன் விளக்கமளித்தார். மேலும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீல், உணவு மற்றும் மருந்து பரிசோதகர் ஜீவராஜா, கல்முனை பிராந்திய தனியார் பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் செரீப், சங்கத்தின் செயலாளர் றினோஸ் அடங்களாக கல்முனை பிராந்திய தனியார் பார்மசி உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.