;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

0

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் மற்றும் ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் வழங்கி பரிமாறப்பட்டன.

இதன்போது மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கனடிய தூதுவர் தன்னுடன் உரையாடிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

குறிப்பாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை யாழ்ப்பாண மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நாடு இவ்வாறான நிலைமைக்கு போனதற்கான காரணங்கள் தொடர்பில் கேட்டறிந்தாக குறிப்பிட்டார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் நாட்டின் அபிவிருத்திக்கும் மாநகரத்தின் அபிவிருத்திக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான விடயங்கள் தொடர்பிலும் தான் கனடிய தூதுவருக்கு தெரிவித்ததாக ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


You might also like

Leave A Reply

Your email address will not be published.