;
Athirady Tamil News

சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் மகள் 492 மதிப்பெண் பெற்று சாதனை..!!

0

ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடமும் சோளிங்கரில் முதலிடமும் பெற்றது. இதனை ஒட்டி இந்த மாணவியை பாராட்டும் விதமாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஏஎல் சாமி, 9 வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் சார்பில் மாணவி சர்மிலியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவிக்கு பொண்ணாடை போர்த்தி பரிசு பொருள் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.