;
Athirady Tamil News

இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி..!!

0

3 பாராளுமன்றம், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்நிலையில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது: ஆந்திரா, ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் திரிபுராவில் பா.ஜ.க.வை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் நலனுக்காக பா.ஜ.க. தொடர்ந்து பணியாற்றும் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.