;
Athirady Tamil News

அமராவதி வேதியியலாளர் கொலை வழக்கு – என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது உள்துறை..!!

0

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ஆங்கில செய்தி சேனல் ஒன்று கடந்த மே மாதம் 26-ம் தேதி நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நபிகள் நாயகம் பற்றி வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பல்வேறு போராட்டங்களுக்கும் வழி வகுத்தது. இதற்கிடையே, நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது நாடுமுழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. கன்னையா லாலை கொலை செய்த 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த வாரம் வேதியியல் நிபுணர் உமேஷ் கோலே (54), கொல்லப்பட்ட சம்பவம் உதய்பூர் கொலையுடன் ஒத்துப்போவதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக உமேஷ் கோலே சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இவர் ஜூன் 21-ம் தேதி அவரின் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உதய்பூர் கொலை போன்று அமராவதி கொலைக்கும் ஒற்றுமை உள்ளதால் இந்த வழக்கு விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.