;
Athirady Tamil News

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி!! (படங்கள்)

0

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் துவிச்சக்கர வண்டிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பேரணி யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்று , அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் நாடு முழுவதும்
தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கொழும்பில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு !! (வீடியோ)

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.