;
Athirady Tamil News

10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க… !! (மருத்துவம்)

0

“வெளியூருக்கு, ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்! வந்ததில் இருந்து, ஒரேசளி, இருமல், ஹ்ம்ம், தண்ணீர் ஒத்துக்கலே!””ஒரே தாகமா இருந்துச்சுன்னு, கடையிலே, ஜூஸ் குடிச்சேன், என்ன தண்ணியிலேபோட்டானோ, ஒரே தும்மல், தொண்டை வலி, ஜலதோஷம் வந்துடுச்சு.”இதுபோன்ற, பல அங்கலாய்ப்புகளை, நாம் பலமுறை கேட்டிருப்போம். நம் உடலின்நோயெதிர்ப்புத் தன்மையின் பலவீனத்தினால், இதுபோன்ற இன்னல்கள் ஏற்படுகின்றன எனும் உண்மையை அறியாமல், பழியை, சூழ்நிலைகள் அல்லது மற்றவர்களின் மேல், திணிக்கும் இதுபோன்ற செயல்களை நாம் அறிந்திருந்தாலும், அந்த நேரத்தில்,எதுவும் கூறாமல், ஒரு மௌனப்புன்னகையுடன் அவர்களைக் கடந்துவிடுவோம். இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடிக்கடி சளி மற்றும் ஜுரம் வந்து, அவதிப்படுவார்கள். ஒருமுறை மருந்துகள் சாப்பிட்டு குணமானாலும், மீண்டும் திரும்ப வரும் ஜலதோஷ சுவாச பாதிப்புகளால், அவர்கள் சிரமப்படுவது மட்டுமன்றி, குடும்பத்தாரையும் சிரமப்படுத்தி, தும்மல், மூக்கில் நீர்வடிதல் மற்றும் சளி பாதிப்புடன் தொண்டையும் கட்டிக்கொண்டு, கரகரப்பான குரலில் புரியாமல் பேசி, அலுவலகத்தில் உள்ளோரையும் சிரமப்படுத்திவிடுவார்கள்.

காரணங்கள்
இதற்கெல்லாம், முதல் காரணம் என்ன தெரியுமா? உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி வலுவிழந்து இருப்பதுதான். அதனால்தான், இவர்களுக்கு இதுபோன்ற சுவாச தொற்று பாதிப்புகள், அடிக்கடி ஏற்படுகின்றன. உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல். சித்த மூலிகை மருத்துவத்தில் ஒரு புகழ்பெற்ற சொல்லாடலை, வைத்தியர்கள் அடிக்கடி கூறுவார்கள்.

கழிவுகளின் தேக்கம், வியாதி! கழிவுகளின் வெளியேற்றம், ஆரோக்கியம்! இதை நாம் முழுமையாக உணர்ந்தால், ஜலதோஷம், காய்ச்சலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல், அவை தானாகவே, குணமாகிவிடும் என்று இருப்போம். ஜலதோஷம், வைத்தியம் செய்தால், ஒரே வாரத்தில் குணமாகிவிடும், இல்லாவிட்டால், குணமாக ஏழு நாட்கள் வரை, ஆகிவிடும் என்று, நகைச்சுவையாகக்கூறுவது, இதனால்தான். நமது உடலில் இயற்கையாக உள்ள ஆற்றல், சுவாசப் பாதைகளில் தேங்கிய நச்சுக்கிருமிகளை அழித்து வெளியேற்றும் நிகழ்வே, சளி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் என்பார்கள், சித்த மூலிகை மருத்துவர்கள். உடலில் தேங்கிய கழிவுகளை, சளியின் மூலம், உடலின் ஆற்றல் வெளியேற்றும் நிகழ்வை நாம், ஜலதோஷம், தும்மல் எனும் உடல்நல பாதிப்புகளாக எண்ணிக்கொண்டு, அதற்கு சிகிச்சை மேற்கொண்டு, நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வை தடுத்து, அவற்றை உடலில் தேங்கவிட்டு, வேறுபல வியாதிகளுக்கு வழிவகுக்கிறோம் என்பதே, உண்மை.

நோயெதிர்ப்பு ஆற்றல்
மனிதர்கள் எல்லோருக்கும், நோயெதிர்ப்பு ஆற்றல் உண்டு, சிலருக்கு, உடலில் ஏற்படும் பாதிப்புகளால், அதன் அளவு குறைந்திருக்கும். இந்த நிலையிலேயே, உடலில் நச்சுக்கிருமிகள் சேர்ந்து, அவற்றை வெளியேற்ற உடலின் ஆற்றல் முயன்று, போதுமான சக்தியின்மையால், ஏற்படும் தொற்று பாதிப்புகள் அடிக்கடிஉடலை பாதிக்கிறது. இதுபோன்ற, நிலைகளில், வேதிச்சத்துள்ள மேலை மருந்துகளை உடலில் செலுத்தி, உடல் நல பாதிப்புகளை மேலும் அதிகரிக்காமல், இயற்கை வழிகளில், இழந்த உடலின் நோயெதிர்ப்பு சக்தியை, வினாடிகளில் மீண்டும் அடையும் வழிமுறைகளை, மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலொன்றுதான், புகழ்பெற்ற இரஷ்ய மருத்துவர் Dr.செர்ஜி புப்நோவ்கி கண்டுபிடித்த, ஜில் தண்ணீர் ஐஸ் வைத்தியம்.

ஜில் தெரபி
மிகவும் குளிர்ந்த நீரில், ஐஸ் கட்டிகளை அதிக அளவில் இட்டு, அந்த நீரில், கால்களை சற்றுநேரம் நனைப்பதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் இழப்பை, உடனே மீட்டெடுக்க முடியும், என்கிறார், Dr.செர்ஜி புப்நோவ்கி.

எப்படி செய்வது
வாயகன்ற சட்டி அல்லது அண்டாவை எடுத்து, அதில் முக்கால் பங்கு குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஐஸ் கட்டிகளை இட்டு வைக்கவேண்டும். வீட்டுக்கு பக்கத்தில் ஐஸ் ஃபேக்டரி இருந்தால், இந்த சிகிச்சை சமயத்தில் நல்ல உபயோகமாக, இருக்கும். உறைபனி நிலையில் உள்ள இந்த நீரில், இரு கால்களையும், பாதங்கள் நன்கு நீரில் படியும் வகையில், நீரில் அழுத்தி, எண்ணி பதினைந்தே வினாடிகளில், கால்களை, நீரிலிருந்து வெளியே, எடுத்துவிட வேண்டும். இதன்மூலம், உடலில் வலுவில்லாமல் இருந்த நோயெதிர்ப்பு ஆற்றல், உடனே, அதிகரித்து, உடலின் பல்வேறு பாதிப்புகளைப் போக்கும்.

இதன்மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பால், அடிக்கடி வரும் ஜலதோசம், ஜுரம் போன்ற பாதிப்புகள் நீங்கி, உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும். மிகவும் பலகீனமான உடல் ஆற்றல் உள்ளவர்கள், இந்த சிகிச்சையை, தினமும் மூன்றிலிருந்து, நான்கு முறைகள் வரை செய்துவர, நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த சிகிச்சையை இரவில் உறங்குமுன் ஒருமுறை செய்துவர, உடல் சோர்வு நீங்கி.

நல்ல உறக்கம் வரும்
அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலை நடத்திய ஒரு ஆய்வில், உறையும் குளிர்நிலையிலுள்ள ஐஸ் தண்ணீர், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுவாக்கும் முக்கிய ஹார்மோனான, நோர்ஃபைன்ஃபிரின் உற்பத்தியை தூண்டுகிறது, என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

பலன்கள்
உடலுக்கு நன்மைகள் செய்யும் பல தீர்வுகளை, அவை தருகின்றன. அவற்றை இனி காண்போம். தசைகளில் ஏற்படும் இறுக்கத்தை, வலிகளைப் போக்கும். ஐஸ் கட்டிகள் நிரப்பிய குளிர் நீரில் கால்களை, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரை நனைத்துவர, கைகளின் தசைகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து,வலிகள் குறைந்துவிடும். கை தசைகளின் வலிகள் மட்டுமன்றி, கால் தசைகளில் உள்ள வலி, முதுகு, இடுப்புதோள்பட்டை மற்றும் கழுத்து தசைகளில் ஏற்படும் வலிகள், பிடிப்பு போன்றவை குணமாகிவிடும்.

மனச்சோர்வை நீக்கும்
மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகளையும் சரிசெய்யும் ஆற்றல் மிக்கது, இந்த ஐஸ் தண்ணீர் சிகிச்சை. அதிக குளிர் தன்மைகள், சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, அதிக குளிர்மிக்க ஐஸ் தண்ணீர் சிகிச்சை மூலம், கால்களை ஐஸ் நீரில் சில வினாடிகள் நனைத்து எடுக்கும்போது, உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பாதிப்புகள் விலகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, மனம் புத்துணர்வடைகிறது. சருமத்தை பாதிப்புகளில் இருந்து காக்கிறது. கால்களை சில வினாடிகள் ஐஸ் தண்ணீரில் நனைக்கும் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், சருமத்தில் உள்ள வியர்வை நாள அடைப்புகள் மற்றும் மேல்தோலின் தளர்வுகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து, இரத்தம் உறைதல் போன்ற பாதிப்பிலிருந்து காக்கிறது.

தலைமுடி பளபளக்க
கால்களை ஐஸ் தண்ணீர் நிரப்பிய தொட்டியில் வைத்து, சில வினாடிகளில் எடுத்துவிடும் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், தலைமுடிகள், பளபளப்பாகவும், மென்மையாகவும் விளங்கும். கால்களை நனைக்கும் ஐஸ் கட்டி தண்ணீர் சிகிச்சையின் மூலம், ஃபாலிசில்ஸ் எனும் தலைமுடிகளின் வேரை சூழ்ந்திருக்கும் செல்திசுக்களின் நுண்ணிய துளைகளை மூடச்செய்வதன் மூலம், முடிஉதிர்தல் கட்டுப்பட்டு, தலைமுடிகள் நன்கு செழித்து வளர்ந்து, பளபளப்பாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கின்றன. இதுபோல, உடலுக்கும், மனதுக்கும் அளவுகடந்த நன்மைகள் அளிக்கும், எளிய ஐஸ் தண்ணீர் சிகிச்சையை, நாம் வீடுகளிலேயே செய்து, நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, மூக்கடைப்பு, ஜலதோசம் உடல் தசை இறுக்கம் மற்றும் மன அழுத்த பாதிப்புகளைப் போக்கி, ஏராளமான நன்மைகளை அடைய முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.