;
Athirady Tamil News

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா!! (படங்கள், வீடியோ)

0

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் பாற்குடப்பவனி இன்று இடம்பெற்றது.

மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே, விளாவட்டவானில் பன்னெடுங்காலமாக கோவில் கொண்டு வீற்றிருந்து, அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பொங்கல் மகாயாகப் பெருவிழா, இன்று பாற்குடப்பவனியுடன் ஆரம்பமாகி,

எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை நாகசதுர்த்தி மகாயாகம், பால்பலம் வைத்தலுடன் இனிதே நிறைவுபெற இருக்கின்றது.

இன்று காலை விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குடப்பவணியானது ஆரம்பித்து ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தை சென்றடைந்ததும் நாகதம்பிரானுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் பாலாபிசேகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.