;
Athirady Tamil News

நல்லூர் மகோற்சவ காலத்தில் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!!

0

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் பெருந்திருவிழாவின் போது ஊடகப்பணி செய்கின்ற ஊடகங்களை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கையினை யாழ்.மாநர சபை தற்போது மேற்கொண்டு வருகின்றது

அதே நேரம் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அறிவுறுத்தலினையும் யாழ்.மாநர சபை விடுத்துள்ளது.

• நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவின் போது ஊடகப் பணி செய்யும் ஊடகவியலாளர்கள் வேட்டியுடன் ஆசார சீலர்களாக பணி செய்தல் வேண்டும்.

• யாழ்.மாநகர சபையினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊடக அனுமதியடையினை கழுத்துப்படியுடன் அணிந்தவாறு மட்டுமே ஊடகப்பணியில் ஈடுபட முடியும்

• முருகப் பெருமான் வீதியுலா வரும் நேரத்தில் ஊடகப் பணி செய்யும் ஊடகவியலாளர்கள் மேலங்கியுடன் நிற்றல் ஆகாது

• ஊடகவியலாளர்கள் Drone Camera மற்றும் தன்னியக்க இயந்திரங்ளைப் சுற்றுவீதியில் பாவித்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது

• முருகப் பெருமான் வீதியுலா வரும் நேரத்தில் இருக்கைகளில் அமர்ந்த வாறு ஒளிப்பதிவுகளை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

• முருகப் பெருமான் வீதியுலா வரும் நேரத்தில் நேரலையினை மேற்கொள்ளுகின்ற ஒளிபரப்பு நிறுவனங்கள் ( உயர்ந்த இடத்தில் இருந்து) கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் சிவப்பு வெள்ளை சீலைக்கு வெளியிருந்தே ஒளிப்பதிவுகளைச் செய்ய வேண்டும்

• ஒலி வர்ணணைகளின் போது ஆலயம் சம்பந்தமான உண்மையான விடயங்களை மட்டும் தெரிவிக்கவேண்டும். மாறாக ஆலயத்தை பற்றி மிகைப்படுத்தி கூறுவதற்காக உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிப்பதனை தவிர்த்துக் கொள்ளவும்

• முருகப் பெருமானைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பக்தர்களின் தலை மட்டத்திற்கு மேல் கமரா ஸ்ரான்ட் உயர்த்தி படப்பிடிப்பதனை தவிர்க்க வேண்டும்.

• மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் ஆலய பணியாளர்களுக்கும் இடையூறு வழங்காமல் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

• தங்களது ஊடக பணியின் போது ஆலயத்திற்கு வரும் எவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்காதவாறு செயற்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.