;
Athirady Tamil News

அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது –

0

மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற நாடு என்பதற்கு இலங்கையே உதாரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை ஒன்றை ஆற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அமைதிக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாடு, நேற்று (30) பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆரம்பமானது.

28 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக உரையாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.