;
Athirady Tamil News

பதவி விலகினார் கதிர்செல்வன் !!

0

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்சசெல்வன் தான் வகித்து வந்த பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், தனது இராஜினாமா கடிதத்தையும் இன்று (31) மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கையளித்துள்ளார்.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்செல்வன் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரதேச சபை தவிசாளராக இயங்கி வந்துள்ளார்.

இவரை காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் நியமித்து அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தலைவராக நியமனம்படுத்தியிருந்தார்.

இன்றைய தினம் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பதவி விலகள் கடிதத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானிடம் கையளித்துள்ள தவிசாளர் கதிர்செல்வன், தான் பதவி விலகியமையானது தனது தனிப்பட்ட தீர்மானமே என்று தெரிவித்துள்ளதுடன், தனது பதவி விலகலுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் எவ்விதமான முரண்பாடும் இல்லை என்று அவர் வழங்கிய கடிதமூலம் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் காங்கிரஸ் உயர் பீடம் எடுக்கும் முடிவுகளுக்கு இணங்குவதாகவும், யாரையும் கேட்டு தனக்கு இந்த பதவி வழங்கவில்லை எனவும், ஆகவே தான் நேசிக்கும் காங்கிரஸ் உயர் பீடம் எடுத்த முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் உயர் மட்டம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.