;
Athirady Tamil News

5 கோடியே 83 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல்..!!

0

கடந்த நிதி ஆண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வருமான வரி தாக்கல் முடிந்தநிலையில், மொத்தம் 5 கோடியே 83 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கணக்குகளில் பெரும்பாலானவை, மாத சம்பளதாரர்கள் மற்றும் தனிநபர்கள் தாக்கல் செய்தவை ஆகும். கடைசி நாளான ஜூலை 31-ந் தேதி மட்டும் 72 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார். முந்தைய 2020-2021 நிதி ஆண்டுக்கும் இதே அளவுக்கு அதாவது 5 கோடியே 89 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததாக அவர் கூறினார். இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், டிசம்பர் 31-ந் தேதி வரை தாமத கட்டணத்துடன் தாக்கல் செய்யலாம். ரூ.5 லட்சம் ஆண்டு வருமானத்துக்கு மேல் இருப்பவர்கள், ரூ.5 ஆயிரமும், ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் கொண்டவர்கள் ஆயிரம் ரூபாயும் அபராத கட்டணமாக செலுத்த வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.