;
Athirady Tamil News

மாநிலங்களவையில் காரசார விவாதம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்..!!

0

விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு காரசாரமாக கருத்துகளை தெரிவித்தனர்.
கொரோனா, போர் காரணம் இந்த விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

பிரகாஷ் ஜவடேகர் (பா.ஜ.க.):- விலைவாசி எல்லோரையும் பாதித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விலைவாசி உயர்வைத் தடுப்பதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றும், ரஷியா-உக்ரைன் போரால் வினியோக சங்கிலி பாதித்ததும்தான் உலகளவில் எரிபொருட்கள், உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலை
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரியை குறைத்திருந்தால் அதிகளவிலான எரிபொருட்கள் விலையால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருந்திருப்பார்கள். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை இருமுறை குறைத்தது. அதையொட்டி பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைந்தன.

பொட்டலம் போடப்பட்ட உணவுப்பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பதற்கு சரக்கு சேவை கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.

8 வருடங்களாக விலை உயர்வு
எலமரம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- கடந்த 8 ஆண்டுகளாக மத்திய மோடி அரசால் அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. உணவுதானியங்கள் உற்பத்தியில் சாதனை படைத்தாலும், விவசாயிகள் நல்ல விலைக்காக போராடுவதும், விலை உயர்வால் மக்கள் நலிவு அடைவதும் சோகமான காட்சிகள். பொட்டலம் போடப்பட்ட உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு, ஏழை மக்களுக்கு மேலும் சுமையாகி விட்டது. இதில் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருமனதாக முடிவு எடுக்கவில்லை. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தன்னிச்சையாக அறிக்கை அளித்தார். அதை திரும்பப்பெற வேண்டும். ஒப்புக்கொண்டு சரி செய்யுங்கள்

டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்):- அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான விலை உயர்வும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் மக்களை ஒருசேர பாதித்துள்ளது. முதலில் பிரச்சினையை ஒப்புக்கொள்ளுங்கள், அடுத்து பிரச்சினையை சரி செய்யுங்கள்.

சக்திசிங் கோஹில் (காங்கிரஸ்):- விலைவாசி உயர்வால் மக்கள் அலுத்து விட்டனர். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். காய்கறிகள் தொடங்கி எரிபொருட்கள் வரை விலைவாசி உயர்ந்து விட்டது.

தி.மு.க. கோரிக்கை
ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சத்தா பேசுகையில், ”முதல்முறையாக கிராம மக்களையும் விலைவாசி பாதித்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்தபோதிலும், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவில்லை” என்று கூறினார். பா.ஜனதா உறுப்பினர் சுதன்சு திரிபாதி பேசுகையில், ”63 நாடுகளில் பணவீக்க விகிதம் 10 சதவீதமாக இருக்கும்போது, இந்தியாவில் பணவீக்கம் 7.1 சதவீதம்தான் உள்ளது” என்று கூறினார். காங்கிரஸ் உறுப்பினர் ரஜனி அசோக்ராவ் பட்டீல் பேசுகையில், ”உஜ்வாலா திட்டத்தில் பெறப்பட்ட கியாஸ் சிலிண்டர்களை கூட மக்கள் பயன்படுத்துவது இல்லை. கியாஸ் விலை உயர்வே இதற்கு காரணம்” என்று கூறினார். ரூபாய் மதிப்பை பழைய நிலவரத்துக்கு கொண்டு வருமாறு தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு விவாதம் நடந்தது. நிதி மந்திரி பதில் பின்னர், விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- விலைவாசி உயர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை. உலகளாவிய காரணங்களால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது யதார்த்த நிலை. ஆனால், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் வலிமையாக உள்ளது. சக நாடுகளுடன், ஏன் வளரும் நாடுகளுடன் ஒப்பிட்டால் கூட இந்திய பொருளாதாரம் மிகச்சிறப்பாக உள்ளது. அம்பானி, அதானி சில்லரை பணவீக்கம் தற்போது 7 சதவீதத்தை ஒட்டி இருக்கிறது. பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கு கீழ் குறைத்து, பின்னர் 6 சதவீதத்துக்கு கீழ் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு கள நிலவர தகவல்கள் அடிப்படையில் அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. ஏழைகளுக்கு பாடுபடாமல், அம்பானி, அதானிகளுக்கு மட்டுமே மத்திய அரசு பணியாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதுபோன்ற கருத்துகள், முக்கியமான விவாதத்தை அரசியலாக்கவே பயன்படும்.

தற்போது விலை குறைவு
2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை தற்போது குறைவுதான். பருப்புவகைகள், மாவு, தயிர், பன்னீர், மோர் ஆகிய உணவு பொருட்கள் மீது மேற்கு வங்காளம், கேரளா, மராட்டியம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு ‘வாட்’ வரி விதித்து வந்தன. எனவே, ஏழைகள் பயன்படுத்தும் எந்த அத்தியாவசிய பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. கவுன்சில் புதிதாக வரி விதிக்கவில்லை. எல்லா மாநிலங்களும் ஏதேனும் ஒருவகையில் அப்பொருட்கள் மீது வரி விதித்து வந்தன. சில்லரையாக விற்கும்போது, ஜி.எஸ்.டி. கிடையாது என்றும் சொல்லி இருக்கிறோம். சண்டிகாரில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. ஒரு மாநிலம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுடுகாடுகளுக்கு வரி கிடையாது சுடுகாடுகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. புதிய சுடுகாடு கட்டுமானத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. அதுபோல், ஆஸ்பத்திரி படுக்கைகளுக்கோ, தீவிர சிகிச்சை பிரிவுக்கோ ஜி.எஸ்.டி. கிடையாது. நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வாடகை கொண்ட ஆஸ்பத்திரி அறைகளுக்குத்தான் வரி விதிக்கப்படுகிறது. வங்கியில் இருந்து பணம் எடுக்க ஜி.எஸ்.டி. கிடையாது. அச்சகத்தில் இருந்து வங்கிகள் பெறும் காசோலை புத்தகங்கள் மீதுதான் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் காசோலைகளுக்கு வரி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநடப்பு மேற்கு வங்காளம் பற்றிய கருத்துக்கு பதில் அளிக்க திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி கிடைக்காததால், அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.