;
Athirady Tamil News

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: தமிழக வீரர் உள்பட 4 பேர் வீரமரணம்..!!

0

சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் காஷ்மீரில் ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தேடுதல் வேட்டை அதன்பேரில், அந்த மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிகபட்ச உஷார்நிலையில் வைக்கப்பட்டனர். தேடுதல் வேட்டை, வாகன சோதனை நடந்து வருகிறது. அதையும் மீறி, நேற்றுரஜவுரி மாவட்டத்தில்தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அம்மாவட்டத்தில் பரஹல் என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த முகாமின் வெளிப்புற கம்பி வேலியை உடைத்துக் கொண்டு 2 பயங்கரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, காவலுக்கு இருந்த ராணுவ வீரர்கள், அவர்களை பார்த்து விட்டனர். சரண் அடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். 2 பயங்கரவாதிகள் பலி அதை கேட்காமல், பயங்கரவாதிகள், உள்ளே நுழையும் நோக்கத்தில் கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கியாலும் சுடத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

காலை 6.10 மணிவரை, அதாவது 4 மணி நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில், தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தமிழக ராணுவ வீரர் இந்திய ராணுவ தரப்பில் 6 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் பெயர் லட்சுமணன். மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்தவர். ராணுவத்தில் ரைபிள்மேனாக இருந்தார். மற்ற இருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ‘சுபேதார்’ ராஜேந்திர பிரசாத், அரியானா மாநிலத்தை சேர்ந்த ‘ரைபிள்மேன்’ மனோஜ்குமார் ஆவர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிஷாந்த் மாலிக் என்ற மேலும் ஒரு ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் இறந்த வர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது கொல்லப்பட்ட 2 பேருடன் வேறு பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்த பகுதியில் கூடுதலாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது. இந்த தகவல்களை பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் தேவேந்தர் ஆனந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படையினராக இருக்கலாம் என்று காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக்சிங் தெரிவித்தார். சுதந்திர தினத்துக்கு 4 நாட்களே இருக்கும்நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. கவர்னர் கண்டனம் இதற்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்த இழிவான தாக்குதலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை உரிய முறையில் கையாளுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராகுல்காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:- காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக வந்துள்ள செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். உங்கள் தியாகத்தை நாடு எப்போதும் நினைவு கொள்ளும். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவும், பலியானோர் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டுகிறேன். பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுக்கு பிறகு இந்த தாக்குதல், காஷ்மீரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தற்கொலைப்படை தாக்குதல் ஆகும். கடைசியாக, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. அதில், 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள். கடந்த ஏப்ரல் 22-ந் தேதி, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள், ஜம்முவில் பிரதமர் மோடி இருந்தபோது தற்கொலைப்படை தாக்குதல் நடந்த முயன்றனர். எதிர்பாராமல் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.