;
Athirady Tamil News

சில தினங்களில் விலைகள் குறையும் !!

0

அடுத்த ஒரு சில தினங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் சில்லறை விலையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும், பல பொருட்களின் விலைகள் குறையும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அதிக சிரமங்கள் ஏற்பட்ட காரணத்தினால், அத்தியாவசிய பொருட்களுக்கான விலையும் அதிகரித்தது. எனினும் தற்போது அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுகின்ற காரணத்தினால் ஒருசில தங்களால் பொருட்களுக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எரிவாயு விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அதற்கான விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீமெந்து, இரும்புக் கம்பிகள், வயர் போன்றவற்றின் விலைகளிலும், பிஸ்கட் உணவுகளின் விலைகளிலும் பாரிய அதிகரிப்பு காணப்படுவதால் மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை செய்து வருகின்றனர். எனவே இந்த பொருட்களுக்கான விலைகளை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபைக்கு இவர்கள் வருகைதந்து தமது விலை சுட்டெண்ணை அறிவிக்க வேண்டும். இது குறித்து ஒரு சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.