;
Athirady Tamil News

நகைக்கடை வியாபாரிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (வீடியோ, படங்கள்)

0

நகைக்கடை வியாபாரிகள் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கலந்துரையாடல் ஒன்று கல்முனை தலைமையக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(20) மாலை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் கலந்து கொண்டு இதன் போது நாட்டில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடிகள் நகை கடை உரிமையாளர்கள் நகை அடகு பிடிப்பாளர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் நகைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களின் விபரங்கள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

நகை கடை உரிமையாளர்கள் நகை அடகு பிடிப்பாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றி தத்தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது நலனில் அக்கறை எடுத்து செயற்படவுள்ள கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் நகைக்கடை வியாபாரிகள் அடகுபிடிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு 0718591161 அல்லது 0672229226 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலானது கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தியதுடன் சித்திக் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக் உட்பட நகை கடை உரிமையாளர்கள் நகை அடகு பிடிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.