;
Athirady Tamil News

சித்தூர்: மதபோதகர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் – மாநில அரசு வழங்குகிறது..!!

0

சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பணியாற்றி வரும் மத போதகர்களுக்கு கவுரவ சம்பளமாக மாதம் ரூ.5 ஆயிரத்தை மாநில அரசு வழங்கி வருகிறது. அதற்கு மத போதகர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் எம்.ஹரிநாராயணனை நேரில் சந்தித்து, நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அப்போது மத போதகர்கள் சங்க தலைவர் பிரசாத் கூறியதாவது:- ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி மாநிலத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், மசூதிகளில் பணிபுரியும் ஹஜரத்களுக்கும், தேவாலயங்களில் வேலை பார்க்கும் மத போதகர்களுக்கும் கவுரவ சம்பளம் வழங்கப்படும், என வாக்குறுதி அளித்தார். அதன்படி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். தற்போது எங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கவுரவ சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை, நாங்கள் வரவேற்கிறோம். அதற்காக, நாங்கள் முதல்-மந்திரிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.