;
Athirady Tamil News

போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு..!!

0

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது கடந்த ஜூலை 25-ந்தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்காலிக வாகனப் பதிவு, தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.200 ஆகவும், வேறு மண்டலங்களில் வாகன தகுதிச்சான்று கட்டணமாக ரூ.500-ம், தகுதிச்சான்று நகல் பெற ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த தகுதிச்சான்று பெற கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகுதிச்சான்று பெறாத வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான சி.எஃப்.எக்ஸ். நோட்டீஸ் வழங்கப்படும்போது ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது இக்கட்டணம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் அல்லது பதிவு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருந்த ரூ.40 கட்டணம் ரூ.500 ஆகவும், வாகன ஆவணங்களுக்கான சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கு ரூ.75-க்கு பதில் ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் தாமதமாக சமர்ப்பித்தால் ரூ.200-ம், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இம்மாதம் இறுதியில் அமலாகலாம் என போக்குவரத்துத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.