;
Athirady Tamil News

கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ நிறுவனம் நடாத்திய (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு!! (படங்கள்)

0

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை(22) செவ்வாய்க்கிழமை(23) இரு நாட்களாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

யுனஸ்கோவின் (unesco) அனுசரணையுடன் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சி திட்டம் விரிவுரையாளர்களான கே.பத்மராஜா, ஏ. நளீம் அவர்களுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.எல்.ஏ. வாஜீத், எஸ்.ஜெயராஜா ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

முதலாம் நாள் ஆசிரிய பயிலுனர்களுக்கு முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டதோடு, இரண்டாம் நாள் நிகழ்வில், கல்வி அமைச்சின் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திருவாளர் எஸ்.முரளீதரன் பிரதம விருந்தினராகவும், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆசிரிய பயிலுனர்களின் ஒட்டுணர்வு தொடர்பான ஆக்கங்கள் கல்லூரிவளாகம் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததோடு அதனை வெளிக்கொணரும் விதமான கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அத்துடன் பங்கு பற்றிய ஆசிரிய பயிலுனர்களுக்கான சான்றிதழ்களை பீடாதிபதி மற்றும் அதிதிகள், உபபீடாதிபதிகள், வளவாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.