;
Athirady Tamil News

சுழிபுரம் பகுதியில் தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!!

0

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது வீடுடைத்து 8 தங்கப் பவுண் நகை திருட்டுப் போயிருந்தது .

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது .

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை இன்று கைது செய்தனர் .

சந்தேக நபர்களிடமிருந்து ஏழரை தங்கப் பவுண் நகை கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர் .

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.