;
Athirady Tamil News

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

0

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் உள்ள பொலிஸ் வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக குறித்த நிகழ்வு இன்று (03.09) காலை 7.40 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும், பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தியதுடன், தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்பட்டதுடன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே உரையாற்றினார். அத்துடன் இறுதியில் உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி எதிரிசிங்க, பொலிஸ் அதிகாரிகள், பொலிஸார், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், மாவட்ட பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.