;
Athirady Tamil News

காற்றில் பறந்த கல்வி அமைச்சரின் வாக்குறுதி! பல்கலைமாணவர்கள் விசனம்!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள்விரிவுரைகளுக்கு வரும் போது அவர்களுக்கென தனியான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனஎன்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம்ஜெயந்த அளித்த வாக்குறுதி காற்றில் கலந்து புஸ்வாணமாகிவிட்டது என பல்கலைக்கழக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்பிறேம்ஜெயந்த தனியார் விடுதி ஒன்றில் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்து, மாணவர்எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது, யாழ். நகருக்குவெளியாக அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கின்றமாணவர்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப் பட்டது.

அங்கிருந்தவர்கள் முன்னிலையில் போக்குவரத்து அமைச்சருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டகல்வி அமைச்சர்
உடனடியாக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கென தனியான சிறப்பு போக்குவரத்து சேவையை வழங்கஅமைச்சர் முன்வந்துள்ளதாகவும், இது தொடர்பிலான அறிவுறுத்தல் வட இலங்கைப் போக்குவரத்து சபையின்கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.

எனினும், நேற்று திங்கட்கிழமை முதல் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டதைஅடுத்து, போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது, தங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தலும்இதுவரை கிடைக்கவில்லை என்று வட இலங்கைப் போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலைவட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் 19 ஆம் திகதி கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பல்கலைக் கழகமானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பேராசிரியர் சிவா சிவானந்தன், பல்கலைக்கழகப் பதிவாளர், விஞ்ஞான பீடாதிபதி, மருத்துவ பீடாதிபதி, மாணவ நலச்சேவை அதிகாரிகள் ஆகியோரும் மாணவர்களுடன் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.