;
Athirady Tamil News

நூலியலாளர் திரு என். செல்வராஜா அவர்களின் நூல்களின் வெளியீடும் அறிமுகமும்.!!

0

ஈழத்து பதிப்பிலக்கிய பரப்பில் தவிர்க்கமுடியாத ஒருவராக விளங்குபவர் நூலவியலாளர் என அறியப்பட்ட நூலியலாளர் திரு என். செல்வராஜா அவர்கள். பிரித்தானியாவில் வாழ்ந்துவந்தாலும் அவரது சிந்தையும் செயலும் எந்நேரமும் ஈழத்து பதிப்பிலக்கியம் சார்ந்தே இயங்கிவருகிறது. ஈழத்து புத்தகங்கள் பற்றிய விபரங்களை சர்வதேசநியமங்களின்படி தொகுத்து நூல்தேட்டம் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார். இதுவரையில் 15 தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவர் இப்போது 16ஆவது தொகுதியை வெளியிடுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 புத்தகங்களின் விபரங்கள் பதியப்பட்டுள்ளன. சுருக்கமாக கூறினால் ஈழத்து புத்தகங்கள் பற்றிய விபரங்களை தன்னகத்தே கொண்ட பெட்டகமாக திரு என். செல்வராஜா அவர்கள் விளங்குகிறார்.

எதிர்வரும் 17ஆம் திகதி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சுன்னாகம் பொதுநூலக ஏற்பாட்டில் நூலியலாளர் திரு. என். செல்வராஜா அவர்களின், ‘நூல்தேட்டம் 16’, ‘நூலகவியல் – பெருந்தொகுப்பு’, ‘நான்கண்ட ஈழத்து நூலக ஆளுமைகள்’ ஆகிய புத்தகங்களின் அறிமுகமும் வெளியீடும், நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ திரு. க. தர்ஷன் அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

அன்பர்கள் ஆர்வலகர்களை நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சுன்னாகம் பொதுநூலகம் சார்பில் வேண்டிக்கொள்கிறோம்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.