;
Athirady Tamil News

பாக்கு விற்பனை செய்த வருமானத்தில் பஸ் வாங்கிய அரசு பள்ளி..!!

0

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் பாக்கு விளைவித்து விற்று அந்த பணத்தில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று வர பஸ் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த அரசு பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுபற்றிய முழுவிவரம் பின்வருமாறு:-

112 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட அரசு பள்ளிக்கு சொந்தமாக 4.15 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு பள்ளி வளர்ச்சி குழு, அப்பகுதி மக்கள் உதவியுடன் 628 பாக்கு மரக்கன்றுகளை நட்டனர். கடந்தாண்டு மரங்கள் வளர்ந்து பாக்குகள் நன்கு விளைந்தது. இந்த பாக்குகள் வெளியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரூ.5 லட்சம் 26 இருக்கைகள் கொண்ட புதிய பஸ் பள்ளிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சை, புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சீவ மடந்தூர் கொடியைத்து தொடங்கி வைத்தார். அதன்படி பஸ்சில், மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக அரசு பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பெரும்பாலும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை படிப்பதால், அவர்களின் தொலைதூர பயண செலவை குறைக்க பஸ் வசதியாக இருக்கும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை சரோஜா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.