;
Athirady Tamil News

இந்தியா செல்ல முயன்ற 8 பேர் !!

0

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

செவ்வாய்க்கிழமை(13) இரவு பேசாலை-தலைமன்னார் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 3 இளைஞர்களும், பெண்களும்,18 வயதிற்கு குறைவான 3 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் கடற்படை ஊடாக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பேசாலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று புதன்கிழமை(14) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும்,ஏனைய 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்தார்.

மீண்டும் குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி (14-12-2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.