;
Athirady Tamil News

குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)

0

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை காரணமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தின் நாவிதன்வெளி , சம்மாந்துறை ,நிந்தவூர் ,சாய்ந்தமருது, கல்முனை, பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குரங்குகள் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழமரங்களுக்கு பலத்த சேத்த்தை விளைவிப்பதுடன் இ வீடுகளுக்கு மேலாக பாய்ந்து செல்வதால் வீட்டின் ஓடுகளும் உடைந்து சேத்த்திற்குள்ளாகின்றன.

மேலும் இவ்வாறு குடியிருப்புகளுக்குள் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து சமயலறையிலுள்ள உணவுப் பொருட்களை உண்டு நாசப்படுத்துகின்றன.
மேற்குறித்த பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பயிர்செய்யப்பட்டுள்ள கொய்யா இ வாழை இ மா போன்ற பழ மரங்களின் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் தமது விவசாய முயற்சிகளை தொடர முடியாதுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு அணில்களையும் இ குரங்குகளையும் அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து சனநடமாட்டம் இல்லாத வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.