;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 6,298 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 6,422-ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரத்து 190 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,916 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 47 ஆயிரத்து 756 ஆக உயர்ந்தது. தற்போது 46,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 23 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையில் 5,28,273 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.