;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அழைப்பிதழ் வெளியீடு..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழை வெளியிட்டார்.

அழைப்பிதழில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
வருகிற 20-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி நடக்கிறது. 26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

அதில் முக்கிய நிகழ்ச்சியாக அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர் திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. இதர வாகன சேவைகள் முதல் நாளான வருகிற (செப்டம்பர்) 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை கொடியேற்றம், இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதி உலா, 28-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா.

29-ந்தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப் பந்தல் வாகன வீதிஉலா, 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது. கருட சேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகனத்தில் வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து கருட வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை ஹனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தங்கத் தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கஜ வாகன வீதிஉலா. 3-ந்தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை 7 மணியளவில் தேர் திருவிழா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை சக்கர ஸ்நானம், இரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-alleged-cbi-ed-unnecessarily-troubling-everyone-512924?infinitescroll=1

You might also like

Leave A Reply

Your email address will not be published.