;
Athirady Tamil News

மக்கள் என்றால் அவர்களுக்கு பயம் !!

0

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தால் மக்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே மக்களுக்குப் பயந்து போயுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கலிகமுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு தேவைப்பட்டிருப்பது மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதனை விட அமைச்சுக்கள், வரப்பிரசாதங்கள், சலுகைகளை அதிகரித்துக் கொள்வதாகும் என்பதனால், அவர்களால் மக்களுக்கு நிவாரணம் வழங்கி மக்களுக்கான பணிகளைச் செய்ய முடியவில்லை என்றார்.

உணவுப் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு, மின்சாரக் கட்டணம் கூட பாரியளவில் உயர்ந்துள்ளதாகவும் இந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அதிகப் பங்காற்றிய மதஸ்தானங்களைக் கூட பழிவாங்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மூலைசாளிகளின் வெளியேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டு மக்களின் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படடமையே காரணம் எனவும் தெரிவித்தார்.

நாக ராஜ கோலம், பாணிக் கோலம் போன்ற பொய்களைச் சொல்லி நன்றாகச் செய்ய கூடிய அதிகாரம் வேண்டும் எனக்கூறி 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வந்து நாட்டை அழித்ததாகவும், இதன் காரணமாகவே இந்த அரசு மக்களின் வாழும் உரிமையைக் கூட பறிப்பதற்காகவும் இந்த அரசாங்கம் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர்களின் வாயிற்காவலர் தான் நாட்டை ஆள்கிறார் என்றும், அவர் ராஜபக்ஷவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

எனவே ராஜபக்ஷவின் நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை நாடு முன்னேற்றமடையாது என தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி ஒடுக்கி வருகின்றது என சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தடை சட்டத்தைப் பயன்படுத்திய வன்னம் இளைஞர்களை கடுமையாக அடக்குமுறைப்படுத்துவதாகவும், அந்த அடக்குமுறையை இன்னும் அதிகரித்த வன்னம் தடை செய்யப்பட்ட வலயங்களை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டி இருந்த போதிலும் தடை செய்யப்பட்ட எல்லைககைளை நாட்டில் சட்டவிரோதமாக திணித்துள்ளதாகவும், இது தவறான செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் நாடு அழிந்தது மடடுமே நடந்துள்ளதாகவும், அதன் மூலம் மக்களின் வழும் உரிமையை கூட பறிப்பதற்கு இந்த அரசாங்கம் முனைந்துள்ளதாகவும்,
அரசாங்கம் மக்களுக்கு பயந்துபோயுள்ளதாகவும், அதனால் தான் உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அடக்குமுறைகளை கையான்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கத்தின் பிரதானி மக்களின் வாக்குகளால் அல்லாமல் ராஜபக்ஷர்களின் வாக்குகளால் வந்தவர் என்பதாலையே அவர் மக்களின் எழுச்சிக்குப் பயந்து போயுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் உணவுப் பணவீக்கம், மின்சாரக் கட்டணம், வாழ்க்கைச் செலவு என்பன மிகவும் அதிகரித்த பின்னனியில் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.