;
Athirady Tamil News

மழை சற்றுஅதிகரிக்கும்!!

0

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்றுஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.