;
Athirady Tamil News

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

0

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் இடம் பெற்றன.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தொழிலதிபரும் ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட சிரேஸ்ட ஆலோசகருமான றிஷாத் ஷரீப்பும் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தருமான எம். இராமக்குட்டி மற்றும் கல்முனைப் பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ.வாஹிட்டும் விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்நடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சாஜித் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு, துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்வலமும், மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.