;
Athirady Tamil News

அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

0

தொல்புரம், வட்டு வடக்கு மேற்கு, சங்கானை மேற்கு ஆகிய விவசாய சம்மேளனங்களை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு இன்று தொல்புரம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

உரத்தினை பெற்றுக்கொண்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு பரப்புக்கு 350 கிராம் பசளை எமக்கு வழங்கப்பட்டது. ஒரு பரப்புக்கு 350 கிராம் பசளை என்பது விவசாய நடவடிக்கைகளுக்கு போதாது. ஒரு பரப்புக்கு ஒரு கிலோ உரம் தேவைப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மூல காரணம் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதே ஆகும்.

விவசாய நிலங்கள் அனைத்தும் அசேதனப் பசளை பாவனைக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன.

ஆகையால் சேதனப் பசளையில் உச்ச விளைச்சலை பெற முடியாது. அத்துடன் தற்போது கால்நடைகள் வளர்ப்பும் குறைந்துள்ளது எனவே சேதனப் பசளைக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

விவசாயிகளுக்கு தேவையான அசேதனப் பசளை, கிருமிநாசினி மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை தடையின்றி வழங்கினால் மாத்திரதே எங்களால் விவசாய நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.