;
Athirady Tamil News

ராகுல்காந்தி நடைபயணத்தில் வீரசாவர்க்கர் பேனர்-பரபரப்பு..!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய அவர் மொத்தம் 150 நாட்களில் 3,750 கி.மீட்டர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதுவரை 350 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி கடந்துள்ளார். கேரள மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதாலும், பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதாலும் ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை முக்கியத்துவம் பெறுகிறது. மாண்டியாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார். சோனியா காந்தி, நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டே விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார். அப்போது, தாயார் சோனியா காந்தியின் கையை பிடித்து நிறுத்திய ராகுல்… இவ்வளவு தூரம் நடந்து வந்ததே போதும் அம்மா… காரில் வாருங்கள் என்று வற்புறுத்தினார். சோனியா காந்தி தொடர்ந்து நடக்கவே ஆயத்தமாக இருந்தது போல தெரிந்தது. ஆனால், ராகுல் காந்தி விடாமல் காரில் வருமாறு அறிவுறுத்தினார். சோனியா காந்தியின் உடல்நலம் காரணமாக ராகுல் காந்தி அவரை நீண்ட தூரம் நடக்க விடாமல் காரில் வர அறிவுறுத்தினார். இதையடுத்து சோனியா காந்தி காரில் ஏறி சென்றார். அம்மாவின் மீதான ராகுல் காந்தியின் பாசத்தினை நேரில் பார்த்த அங்கிருந்த கட்சியினர் நெகிழ்ந்து போனார்கள். இதனிடையே ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சாவர்க்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டியா மாவட்டத்தின் சில இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்களில், தலைவர்களின் படங்களுடன் வீர சாவர்க்கரின் படமும் இடம் பெற்றிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் அந்த பேனர்களை அப்புறப்படுத்தினர். நடைபயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சிலர் அந்த பேனர்களை வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.