;
Athirady Tamil News

இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு – நிபுணர் சொல்கிறார்..!!

0

நமது நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ உயிர்வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்டார். ஆனால் இந்தியில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார். இந்தி எம்.பி.பி.எஸ். படிப்பினால் என்ன பாதகம் என்று அவர் கூறும் தகவல்கள்:-

* இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இத்தகைய பின்னணி கொணட மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க வருவார்கள். தமிழ்நாடு, கேரளா என தென் மாநில மாணவர்கள் இந்தியில் சரளமான பேச்சுத்திறன் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தும்.

* எம்.பி.பி.எஸ். என்பது அடிப்படை பட்ட படிப்பு அல்ல. உயிராபத்தான சூழலில் டாக்டர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் டாக்டர்கள் பணியாற்ற முடியாது. அவர்கள் பிற வாய்ப்புகளையும் தேட விரும்புவார்கள். இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேல்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சி நடத்தவோ முடியாது.

* உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை டாக்டர்கள் பின்பற்ற வேண்டும். அவை ஆங்கிலத்தில்தான் உள்ளன.

* வெறும் எம்.பி.பி.எஸ்.சுடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த உடனேயோ, பின்னரோ அவர்கள் உயர் படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள் மாநில மொழிகளில் வர வேண்டிய தேவை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.