;
Athirady Tamil News

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகள் இலங்கையின் வடபகுதியில் அமுல்!!

0

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது.

ஆனால் கடந்தவாரம் மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியிலுள்ள
கடலட்டை உற்பத்திக் குஞ்சு நிலையத்தில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிக்காக வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிக்கிறது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகளை இலங்கையின் வடபகுதியில் அமல்படுத்துவதை வடபகுதி மீனவர்கள் விரும்பவில்லை.

இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகம் என்பன இதனை கருத்தில் கொண்டு கடலட்டை சார்ந்த தொழில்நுட்பங்களை அமுல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் .

ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு சார் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.