;
Athirady Tamil News

யாழில் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சோதனையிட்ட வேளை வீட்டின் சமையல் அறையில் 34 வயதுடைய ஒருவர் கசிப்பு காய்ச்சிய வண்ணம் காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அங்கிருந்த 15 லீட்டர் கசிப்பையும் மீட்டு இருந்தனர். அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் என்பவற்றை சான்று பொருட்களாக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்த பொலிஸார் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.