;
Athirady Tamil News

தீபாவளியை முன்னிட்டு ராகுல் காந்தி பாதயாத்திரை 3 நாட்கள் ஒத்திவைப்பு..!!

0

பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் முனைப்பாக உள்ளது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை பாதயாத்திரை) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரள, கர்நாடக மாநிலங்களில் யாத்திரையை முடித்து விட்டு ஆந்திர மாநிலத்தில் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி பாரத் ஜோடோ பாதயாத்திரை 3 நாட்கள் ஒத்திவைக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டரில், பாரத் ஜோடோ யாத்திரையானது, தீபாவளியை ஓட்டி அக்டோபர் 24 மற்றும் 25-ம் தேதியும், மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு தேர்தல் சான்றிதழ் வழங்குவதற்காக அக்டோபர் 26-ம் தேதியும் ஒத்திவைக்கப் படுகிறது. அக்டோபர் 27-ம் தேதி தெலுங்கானாவில் இருந்து பாதயாத்திரை மீண்டும் தொடங்கும் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.