;
Athirady Tamil News

பாராளுமன்றத்தை பார்வையிட மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!!

0

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும், பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

கொவிட்-19 பரவல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தது.

எனினும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் பார்வையிடுவதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த மட்டுப்பாடுகளும் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பாடசாலை அதிகாரிகள் தங்களது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலமாகவும் 011 2777 473 அல்லது 011 2777 335 என்ற தெலைநகல் இலக்கங்கள் மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.