;
Athirady Tamil News

தடையை மீறி பட்டாசு வெடிப்பு- தலைநகர் டெல்லியில் மிகவும் மோசமானது காற்றின் தரம்..!!

0

தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் பதிவாகியுள்ளது.ஆனால், இது முந்தைய ஆண்டுகளைவிட குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணியளவில் தலைநகரின் காற்றின் தரக் குறியீடு 326 ஆக இருந்தது. தொடர்ந்து, அண்டை நகரங்களான காசியாபாத் (285), நொய்டா (320), கிரேட்டர் நொய்டா (294), குருகிராம் (315) மற்றும் ஃபரிதாபாத் (310) ஆகியவை ‘மோசமான’ முதல் ‘மிகவும் மோசமான’ காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன. பூஜ்ஜியத்தில் இருந்து -50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51லிருந்து-100 புள்ளிகள் வரை இருந்தால் மிதமானது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் 101லிருந்து – 150 புள்ளிகள் இருந்தால் உடல்நலத்துக்கு தீங்கானது என்றும் 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானது எனக் கருதப்படுகிறது. காற்று மாசு காரணமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்கபட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பாக, டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று 382 ஆகவும், 2020ல் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2017ல் 319 ஆகவும், 2016ல் 431 ஆகவும் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.