;
Athirady Tamil News

வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிக்க… !! (மருத்துவம்)

0

ஆமணக்கெண்ணெய் இனிப்பு குணமிக்கதாகும். இதனால் இது உடனடியாக வேலை செய்யக்கூடியது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது கபம், வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக விளங்குறது.

குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற மருந்துகளில் மிக சிறந்த மருந்தாகும். இதை நாள் தோறும் ஒரு தேக்கரண்டி அளவு தாய்ப் பாலிலேனும், பசும் பாலிலேனும் கலந்து கொடுக்கலாம். வயிற்றினுள் ஏற்படும் வீக்கமான நிலையில் இதை மிகவும் பாதுகாப்பான மலப்போக்கியாகப் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள், சிற்றாமணக்கு எண்ணெயை ஆமவாத நோயில், நோய்க்குரிய மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். ஏன் எனில், அது உடலிலுள்ள விஷத்தன்மையை வெளிப்படுத்த உதவி செய்கின்றது.

வெளிப் பிரயோகத்தில், தோலின் வெடிப்புகளுக்கும், பிளவுகளுக்கும், பாதங்களின் எரிச்சலுக்கும் பயன்படுகிறது. சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் கலந்து பசையாக, சிரங்குக்கு வெளிப்பிரயோகமாகப் போடலாம். கட்டிகளுக்குப்போட அவைப்பழுத்து உடையும். சிற்றாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவரப் பெண்களுக்குப் பால் சுரக்கும்.

இலைகளைச் சிறுக அரிந்து சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக்கூடிய சூட்டில், வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கும், வாத இரத்த வீக்கங்கடளுக்கும் ஒற்றடமிடலாம். இதனால் வேதனை தணியும்.

சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சை அளவு மூன்று நாளைக்குக் காலையில் மாத்திரம் கொடுத்து, நான்காம் நாள் 3 அல்லது 4 முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைச் சூரணம் கொடுக்க, காமாலைத் தீரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.