;
Athirady Tamil News

ஊழல் தொடர்பில் முறையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம்!!

0

அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (4) அறிவித்துள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

மேலும், பதிவாளர் திணைக்களம் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் செய்யும் இத்தகைய செயல்கள் குறித்த முறைப்பாடுகளையும் அதே எண்ணுக்கு அனுப்பலாம்.

மேலும், அரச நிறுவனங்களில் பொதுப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் லஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகளை 1954 என்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.