;
Athirady Tamil News

யாழில். புகையிரத விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் , அரியாலை பூங்கன்குளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

அதனை அடுத்து குறித்த புகையிரதத்தில் படுகாயமடைந்த இளைஞனை ஏற்றி புகையிரதம் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மீள திரும்பி , அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.