;
Athirady Tamil News

அமைச்சருக்கு சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!

0

அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைத் திருத்த அறிவிப்பு திகதிகளை இரத்து செய்யுமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பெற்றொலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருளுக்கான முற்பதிவுகளை செய்யும் போது, விற்பனையாளர்கள் குழப்பமடைவதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.

எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றங்களுக்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆகிய திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தினால் திகதிகள் இல்லாமல் எரிபொருள் விலை திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதாகவும் திகதிகள் தெரியாத காரணத்தினால் விற்பனையாளர்கள் தொடர்ந்து தமது முற்பதிவுகளை மேற்கொண்டு வந்தனர்.

எனினும், எரிபொருள் திருத்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் திருத்தப்பட்ட விலைகளை முழுமையாக நிர்ணயம் செய்யாமல் எரிபொருள் பௌசர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியேற சேமிப்பு முனையம் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் பெறும் இலாபத்தைப் பற்றி அமைச்சுக்கு தெரியப்படுத்த அவர்கள் அதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டிய சங்கம், எனவே, எரிபொருள் விலைத் திருத்த திகதியை ரத்து செய்யுமாறு அமைச்சரிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சரும் தமது கோரிக்கையை உறுதிப்படுத்தியதுடன், எரிபொருள் விலை திருத்த திகதிகளை இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் தெரிவித்ததாக சங்கம் குறிப்பிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.