;
Athirady Tamil News

போதைப்பொருள் கடத்தலுக்கு மீனவர்கள் துணை போக கூடாது!!

0

போதைப்பொருள் கடத்தலுக்கு வடக்கு மீனவர்கள் துணை போக கூடாது எனவும் , அவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , அதனை பாதுகாப்பு தரப்பினருக்கோ , பொலிஸாருக்கோ தெரியப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரை விகாராதிபதி மீனவர்களிடம் கோரியுள்ளார்.

வடக்கில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் , யாழ்.மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அதன் போதே மீனவர்களுக்கு விகாராதிபதி , வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான போதைப்பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வடக்கு மீனவர்களின் உதவிகளுடன் வடக்குக்கு கடத்தி வரப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

எனவே கடற்தொழிலுக்கு செல்வோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விழிப்புடன் இருந்து , போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த மீனவர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். கடத்தலுக்கு துணை போகாது, கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்கள் அறிந்தால் , அது தொடர்பில் விரைந்து பாதுகாப்பு தரப்பிற்கோ அல்லது பொலிஸாருக்கோ அறிவிக்க வேண்டும் என கோரினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.