;
Athirady Tamil News

ஸ்ரீராமசேனை அமைப்பினர் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றனர்..!!

0

தத்தா மாலை நிகழ்ச்சி
சிக்கமகளூரு அருகே பாபாபுடன் கிரி மலையில் தத்தா குகை கோவில் உள்ளது. இங்கு இந்து, முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் தத்தா கோவிலுக்கு இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஸ்ரீராமசேனை அமைப்பினர் தத்தா மாலை நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். அதாவது, மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், தத்தா குகைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். அதுபோல், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிக்கமகளூருவில் தத்தா மாலை நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி ஸ்ரீராமசேனை அமைப்பினர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

யாசகம் பெற்றனர்
இந்த நிலையில் மாலை அணிந்து விரதம் இருந்த ஸ்ரீராமசேனை அமைப்பினர் நேற்று சிக்கமகளூரு நகரில் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றனர். அரிசி, பருப்பு, தானியம், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் யாசகமாக வாங்கினார்கள். யாசகமாக பெற்ற இந்த பொருட்களை இன்று தத்தா மலைக்கு எடுத்து சென்று பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க உள்ளனர். இன்று காலை ஸ்ரீராமசேனை அமைப்பினர், அதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் தலைமையில் சிக்க மகளூரு பசவனஹள்ளியில் இருந்து எம்.ஜி.ரோடு வழியாக போலராமேஸ்வரர் கோவில் வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்த உள்ளனர். இதில் ஆயிரக்கணக் கான ஸ்ரீராமசேனை தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் பல்வேறு மடாதி பதிகளும் கலந்துகொள்வார்கள்.

போலீஸ் பாதுகாப்பு
பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சந்திர திரிகோண மலையில் உள்ள தத்தா பீடத்துக்கு சென்று தத்தா பாதத்தைை தரிசனம் செய்ய உள்ளனர். தத்தா மாலை நிகழ்ச்சியையொட்டி சிக்கமகளூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.