;
Athirady Tamil News

ஸ்கேன் மையத்தில் பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த ஊழியர் கைது..!!

0

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் அடூரில் பொது மருத்துவமனை அருகே தனியார் ஸ்கேன் மையம் உள்ளது. இங்கு தினமும் நோயாளிகள் வந்து ஸ்கேன் எடுப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த மையத்தில் ஊழியராக இருப்பவர் கொல்லம் கடக்கலைச் சேர்ந்த அஞ்சித் (வயது 34). இவர் ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, அஞ்சித் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் எவ்வளவு காலம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.