;
Athirady Tamil News

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை நிகழ்வு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு, தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய பரிசோதனை நிகழ்வு இன்று காலை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் யாழ்ப்பாண பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஐரூல் ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்று, பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது, பொலிஸ் அணிவகுப்பு, வாகன பரிசோதனை, பொலிஸாருக்கான சிறப்பு வகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.