;
Athirady Tamil News

உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேச்சு..!!

0

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர ஆய்வு மாநாடு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று பெரிய தரவுகளின் சக்தியை ஆராய்ந்து பயன்படுத்தவும் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும்போது நேரடி கருத்து வழிமுறைகளை வலுப்படுத்தவும் வாய்ப்பை உருவாக்கியது. கொரோனா முதல் அலை காலத்தில் தரவுகளை திரட்டுவதும், தரவுகளில் தொடர்புடைய புள்ளிவிவர இடைவெளியும் முதலாவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மிகவும் ஆபத்தான இரண்டாவது அலையின்போது, இலக்கு கொள்கை தலையீடுகளை வடிவமைப்பதற்கு துறை அளவிலான அழுத்தம் பற்றிய தகவல்களை சேகரிப்பது இன்னும் முக்கியமானதாக இருந்தது. கொரோனா 3-வது அலை இருந்தபோதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் போர் புதிய சவால்களை கொண்டு வந்தது. ஒரு கடினமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை உலகம் திடீரென எதிர்கொண்டது. வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களால் உந்தப்பட்டு உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் வடிவில் ஒரு புதிய ஆபத்து உருவானது. இது முக்கியமான பொருட்களுக்கான எந்த ஒரு மூலத்தையும் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னுக்குக் கொண்டு வந்தது. பொருட்களின் விலை வானளவு உயர்ந்ததுடன், வினியோக சங்கிலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த காரணிகள் பணவீக்கத்தின் உலகமயமாக்கலுக்கு வழிவகுத்தன. வர்த்தகக் கொள்கை நடவடிக்கைகள் (கட்டணம் மற்றும் வரி அல்லாத) மற்றும் நிதி நடவடிக்கைகள் (விலை முடக்கம், வரிக்குறைப்பு மற்றும் ஏழைகளுக்கு மானியங்கள்) ஆகியவற்றை உலக நாடுகள் நாடியதால், இந்தியச் சூழலில் இத்தகைய நடவடிக்கைகளின் பொருத்தத்திற்கும் கவனம் செலுத்தப்பட்ட ஆராய்ச்சி கவனம் தேவை. கொரோனா, ஐரோப்பாவில் போர் மற்றும் நாடுகளின் பணவியல் கொள்கையின் தீவிரமான இறுக்கம் ஆகிய 3 மிகப்பெரிய அதிர்ச்சிகள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதார ஆராய்ச்சிக்கு மிகவும் மாறுபட்ட சவால்களை முன்வைத்தன. இந்த மூன்று அதிர்ச்சிகளின் பின்விளைவுகள் இன்னும் வெளிவருகின்றன. இதனால் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.