;
Athirady Tamil News

ஈஸ்டர் சந்தேக நபர் நடுவீதியில் கொலை: சஜித் கேள்வி!!

0

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டார். என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சட்டத்தை மதிக்காத அராஜக போக்குதலைதூக்கியுள்ளது என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று(29) கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிரந்த அமரசிங்க என்ற சமூக ஊடக செயற்பாட்டாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காணொளியொன்று உள்ளதாகவும், மறுபுறம்,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் வீதியில் கொல்லப்பட்டுள்ளார்.

சமூகம் அச்சத்தில் மூழ்கும் முன் இதுதொடர்பாக சபை முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்ட மட்டக்குளிய சஃபியா ஒழுங்கையில் வசிக்கும் மொஹமட் பதூர்தீன் மொஹமட் ஹரிநாஸ் (வயது 38) என்பவர், நேற்று ​(28) படுகொலை செய்யப்பட்டார்.

காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.