;
Athirady Tamil News

பாலியல் தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து தன்னை 2 இளைஞர்கள் காப்பாற்றியதாக வெளிநாட்டு பெண் யூ-டியூபர் மகிழ்ச்சி..!!

0

தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹயோஜியோ இரவு 11.30 மணி அளவில் கார் பகுதியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் (லைவ்) நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். அப்பெண் அவர்களிடம் இருந்து நைசாக நழுவ தொடங்கினார். இருப்பினும் வாலிபர்கள் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

கவுரவித்த பெண் யூ-டியூபர்
இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது, முகமது நக்யூப் அன்சாரி ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண், தனது கையை பிடித்து தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து இந்திய இளைஞர்கள் ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் தன்னை காப்பாற்றியதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். தன்னை காப்பற்றிய அவர்களை கவுரவிக்க ஓட்டலுக்கு வரவழைத்து மதிய விருந்து கொடுத்தார். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.